மாநில செய்திகள்

அரியானா மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு + "||" + Curfew with relaxations in Haryana extended till June 14

அரியானா மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு

அரியானா மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு
அரியானா மாநிலத்தில் வரும் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு மேலும் ஒரு வாரத்திற்கு வரும் 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுக்கு அரியானா மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறக்க அனுமதிக்கப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 21 பேர் வரை மத இடங்களில் ஒன்றுகூடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 21 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத இருக்கை வசதியுடன் உணவகங்கள், பார்கள் மற்றும் கிளப் வீடுகள் திறக்க அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு; தியேட்டர்கள் திறக்க அனுமதி
ஊரடங்கில் தளர்வாக புதுவையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்கவும் மதுக்கடைகளில் பார்களை செயல்படுத்தவும் அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு; வங்காளதேசத்தில் ஆகஸ்டு 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு வங்காளதேசத்தில் ஆகஸ்டு 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
3. அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
அரியானாவில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
4. அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ந்தேதி வரை நீட்டிப்பு
அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. அரியானாவில் முதல்-மந்திரிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.