மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 8:15 PM GMT (Updated: 6 Jun 2021 8:15 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சென்னை,

தென் மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 3-ந்தேதி தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழையை பெறும். ஆனால் தமிழ்நாட்டில் இந்த பருவமழை காலத்தில் குறைவான மழையே கிடைக்கும். இதனைத் தொடர்ந்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிக மழையை பெறும்.

அந்த வகையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது முன்னேறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவும், மத்திய பிரதேசம் முதல் தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) பெய்யக்கூடும் என்று ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நாளைமறுதினம் (புதன்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘திருமயம் 19 செ.மீ., லப்பைக்குடிக்காடு 9 செ.மீ., பள்ளிப்பட்டு, பந்தலூர் தலா 8 செ.மீ., தொழுதூர், நெய்வேலி, சோத்துப்பாறை, நாவலூர் கோட்டப்பட்டு தலா 7 செ.மீ.' உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Next Story