மாநில செய்திகள்

மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பலி + "||" + Woman dies of black fungal infection in Madurai

மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பலி

மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பலி
மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி இருக்கிறது. இது போல் தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் தமிழகத்தில் பரவலாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டு தலின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரையை பொறுத்தமட்டில் 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 60 பேர் அறிகுறி களுடன் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் போடிநாயக்கனூரை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

ஏற்கனவே, திண்டுக்கல்லை சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று உயிரிழந்து இருந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 8 வரை தரிசனத்திற்கு தடை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா? - நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.
3. மதுரையை எழில்மிகு நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
மதுரையை எழில்மிகு நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
4. நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு
நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதியவர் பலியானார்.
5. மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது
இதயம் அறக்கட்டளை நிறுவனரான சிவக்குமார், மதர்ஷா ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.