தமிழக காவல் துறையில் 26 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்


தமிழக காவல் துறையில் 26 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
x
தினத்தந்தி 6 Jun 2021 10:26 PM GMT (Updated: 6 Jun 2021 10:26 PM GMT)

தமிழக காவல் துறையில் நிர்வாக ரீதியாக உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்படும் நடவடிக்கை தொடர்கிறது. நேற்று மேலும் 26 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர்.

சென்னை,

பெண் சூப்பிரண்டுகள்

1.பொன்னி-இவர் லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டாக (மத்திய பகுதி) பணியில் இருந்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

2.சுஜித்குமார்-மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

3.துரை-காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், தலைமையக உதவி ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

4.சம்பத்குமார்-போச்சம்பள்ளி சிறப்பு காவல்படை கமாண்டராக பணியாற்றும் இவர், நலப்பிரிவு உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

5.சாந்தி-சிவில் சப்ளை சி.ஐ.டி.சூப்பிரண்டாக பதவி வகிக்கும் இவர், மனித உரிமை ஆணைய சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

6.மகேஷ்குமார்-நெல்லை நகர போக்குவரத்து -குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியில் உள்ள இவர், சேலம் அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

7.தீபா சத்யன்-காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

8.பெருமாள்-விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

9.டாக்டர் ஆர்.சிவகுமார்-ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார்.போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

10.சுகுமாரன்-மதுரை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனரான இவர், மிதக்கும் காவல்பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

11.சண்முகப்பிரியா-காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.இவர் சைபர் கிரைம் (1) சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

12.சுப்புலட்சுமி-காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர், சென்னை மதுவிலக்கு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

13.அசோக்குமார்-மிதக்கும் காவல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், சொத்துரிமை செயலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

பாண்டியராஜன்

14.பாண்டியராஜன்-நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், போச்சம்பள்ளி சிறப்பு காவல்படை கமாண்டராக நியமிக்கப்பட்டார்.

15.பாஸ்கரன்-மதுரை நகர தலைமையக துணை கமிஷனராக பணியில் உள்ள இவர், மதுரை மண்டல சிவில் சப்ளை சி.ஐ.டி.சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

16.கிங்ஸ்லின்-லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு சூப்பிரண்டாக இருக்கும் இவர், பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு (2) சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

17.அதிவீரபாண்டியன்-சென்னை தலைமையக துணை கமிஷனராக பணியாற்றும் இவர், திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

18.ராதாகிருஷ்ணன்-விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

19.பெத்து விஜயன்-காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர், மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

20.குணசேகரன்-சேலம் அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர், நாகை கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

செந்தில்குமார்

21.சந்திரசேகரன்-சேலம் நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பொறுப்பில் உள்ள இவர், வேலூர் சிறப்பு காவல்படை கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

22.தங்கவேலு-மாநில மனித உரிமை ஆணையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பொருளாதார குற்றப்பிரிவு (2) சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

23.பழனிகுமார்-சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டான இவர், வணிக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

24.ஸ்டாலின்-மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை சூப்பிரண்டான இவர், சிவில் சப்ளை சி.ஐ.டி.பிரிவுக்கு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

25.சுரேஷ்குமார்- பெண்கள்- குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு (2) சூப்பிரண்டான இவர், பூந்தமல்லி சிறப்பு காவல்படை கமாண்டராக மாற்றப்பட்டார்.

26. டி.செந்தில்குமார்-வேலூர் சிறப்பு காவல் படை கமாண்டராக பதவி வகிக்கும் இவர், டெல்லி சிறப்பு காவல் படை கமாண்டராக பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியாக கடந்த ஒரு வாரத்தில் 121 உயர் போலீஸ் அதிகாரிகள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story