மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி: பிரதமருக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி

மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி: பிரதமருக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி
x
தினத்தந்தி 7 Jun 2021 3:23 PM GMT (Updated: 7 Jun 2021 3:23 PM GMT)

மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறும் போது, “ மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். தடுப்பூசி கொள்கையில் முந்தைய நிலையை மாற்றிக் கொண்டதற்கு பிரதமருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசி பதிவு, சான்று தரும் நடைமுறை போன்றவற்றை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றார். மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக ஜூன் 21 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும்  என்றார்.

Next Story