தமிழை பிளஸ்-2 வரை கட்டாய பயிற்றுமொழியாக்கும் சட்டம்: சட்டசபை முதல் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்


தமிழை பிளஸ்-2 வரை கட்டாய பயிற்றுமொழியாக்கும் சட்டம்: சட்டசபை முதல் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 7 Jun 2021 7:17 PM GMT (Updated: 7 Jun 2021 7:17 PM GMT)

தமிழை பிளஸ்-2 வரை கட்டாய பயிற்றுமொழியாக்கும் சட்டம்: சட்டசபை முதல் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலகில் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட 8-வது அட்டவணை மொழிகள் அனைத்தையும் தேசிய ஆட்சி மொழிகளாக அறிவிக்கச் செய்யப்போவதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அவரது மொழியுணர்வு பாராட்டத்தக்கது.

அதே நேரத்தில் அந்த உணர்வு அவரது அடி மனதிலிருந்து எழுந்ததாக இருந்தால், முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழியை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். அதுதான் தமிழ் வளர்ச்சிக்கான இன்றைய அவசர, அவசியத் தேவையாகும்.

தமிழை பள்ளி இறுதி வகுப்பு வரை படிப்படியாக கட்டாய பயிற்றுமொழியாக்கும் சட்டத்தை சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதன்மூலம் தமிழ் மொழி மீதான பற்றை தி.மு.க. அரசு நிரூபிக்க வேண்டும். தமிழை கட்டாய பயிற்று மொழியாக்கும் சட்டம் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story