மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுமா? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுமா? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2021 7:52 PM GMT (Updated: 7 Jun 2021 7:52 PM GMT)

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுமா? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த வக்கீல் கற்பகம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

Next Story