வதந்திகளை பரப்பி உயிரோடு விளையாடுகிறார்கள்: தடுப்பூசி குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எல்.முருகன் அறிக்கை


வதந்திகளை பரப்பி உயிரோடு விளையாடுகிறார்கள்: தடுப்பூசி குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எல்.முருகன் அறிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2021 8:00 PM GMT (Updated: 8 Jun 2021 8:00 PM GMT)

வதந்திகளை பரப்பி உயிரோடு விளையாடுகிறார்கள்: தடுப்பூசி குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எல்.முருகன் அறிக்கை.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசியே பெரிய ஆயுதம். கடந்த 60 ஆண்டுகளை ஒப்பிடும்போது, ஒரு தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், தற்போது மிக குறுகிய காலத்திலேயே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தியதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளோம். இதுவரை 23 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி தொடர்பாக சிலர் வதந்திகளை பரப்பி மக்களின் உயிரோடு விளையாடி கொண்டு இருக்கின்றனர். வதந்திகளிடம் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும். தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பணியை இளைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

80 கோடி ஏழை பயனாளிகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பிலும், தமிழக பொதுமக்கள் சார்பிலும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்..

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story