அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் ஆஸ்பத்திரிகள் உரிமம் ரத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை


அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் ஆஸ்பத்திரிகள் உரிமம் ரத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2021 8:08 PM GMT (Updated: 8 Jun 2021 8:08 PM GMT)

டாக்டர்கள், நர்சுகளை தாக்கினால் கடும் நடவடிக்கை அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் ஆஸ்பத்திரிகள் உரிமம் ரத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை.

சென்னை,

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசும், ஆஸ்பத்திரிகளும், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களும் அல்லும், பகலும் அயராது தம் உயிரை துச்சம் என மதித்து அரும்பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் சில நோயாளிகள் உயிரிழக்க நேரிடும்போது ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் மற்றும் பிற பணியாளர்களை அந்த நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது.

இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், பொதுமக்களிடம் அதிக கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் ஆஸ்பத்திரிகள் மீதும், டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது. இந்த ஆஸ்பத்திரிகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story