மாநில செய்திகள்

இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு பாராட்டு: கொரோனா இல்லாத நாடாக விளங்க எடுத்திருக்கும் இன்றியமையாத நடவடிக்கை மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் + "||" + Praise for free vaccination: O. Panneerselvam writes to Modi

இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு பாராட்டு: கொரோனா இல்லாத நாடாக விளங்க எடுத்திருக்கும் இன்றியமையாத நடவடிக்கை மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு பாராட்டு: கொரோனா இல்லாத நாடாக விளங்க எடுத்திருக்கும் இன்றியமையாத நடவடிக்கை மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு பாராட்டு: கொரோனா இல்லாத நாடாக விளங்க எடுத்திருக்கும் இன்றியமையாத நடவடிக்கை மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.
சென்னை,

பிரதமர் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஜூன் 21-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில், மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்குதல், 80 கோடி மக்கள் பயனடையும் வகையில் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி பண்டிகை வரை நீட்டித்தல் போன்ற தங்களின் அறிவிப்புகளுக்கு என்னுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தடுப்பூசி கொள்முதல் செயல்முறையில் மத்திய அரசு மேம்பட்ட பங்கை செலுத்துவது, தடுப்பூசி போதுமான அளவு கிடைப்பதற்கும், குறைந்த நேரத்தில் அதிகபட்ச தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கவும் வழிவகை செய்யும் என்று நான் நம்புகிறேன். மாநிலங்கள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு இந்த முடிவு திருப்தி அளிக்கும். கூடிய விரைவில் கொரோனா இல்லாத நாடாக இந்தியா விளங்க எடுத்திருக்கும் இன்றியமையாத நடவடிக்கை இது.

தடுப்பூசியை பெறுவதில் பிரச்சினைகளை சந்தித்து வரும் தமிழ்நாட்டுக்கு இந்த ஏற்பாடு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். இதேபோன்று, இலவச உணவுப் பொருட்களை வரும் தீபாவளி வரை நீட்டித்து இருப்பது ஓர் உந்துதல் நடவடிக்கை மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசுக்கு இது பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டில் 13 பேர் இறந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா? என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடுப்பதா? கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடுத்ததற்கு கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
4. போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கட்சி வித்தியாசம் இன்றி பணி ஒதுக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கட்சி வித்தியாசம் இன்றி பணி ஒதுக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.
5. விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை மூட முயற்சி அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை மூடும் முயற்சியில் தி.மு.க. அரசு இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.