மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு + "||" + The Tamil Nadu government has announced that additional rice will be provided to ration card holders in June and July

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு
ரேஷன்கார்டுதாரர்களுக்கு மத்திய அரசின் கூடுதல் ஒதுக்கீட்டுடன் ஜூன், ஜூலை மாதங்களில் அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் 2.09 கோடி அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு (ஏ.ஏ.ஒய்) மாதந்தோறும் அதிகபட்சம் 35 கிலோவும், 93 லட்சம் முன்னுரிமை ரேஷன்கார்டுதாரர்களுக்கு (பி.எச்.எச்.) நபர் ஒருவருக்கு தலா 5 கிலோவும், எஞ்சிய முன்னுரிமையற்ற ரேஷன்கார்டுதாரர்களுக்கு (என்.பி.எச்.எச்.) 20 கிலோ விலையில்லா அரிசியும் வழங்கப்படுகின்றன. ரேஷன்கார்டுதாரர்கள் தேவைக்கு ஏற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம்.


கொரோனா பரவலின் 2-ம் அலையால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்களை விலையில்லாமல் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

கூடுதல் அரிசி வினியோகம்

இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி, ரேஷன்கார்டுதாரர்களையும் சேர்த்து கூடுதல் அரிசி வழங்கி வருகிறது.

உதாரணமாக ஈரலகு உள்ள குடும்பத்துக்கு 20 கிலோ, 3 அலகு உள்ள குடும்பத்துக்கு 30 கிலோ என்ற அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் சேர்த்து, இரு மடங்கு அரிசி கிடைக்கும். மே மாதம் வழங்க வேண்டிய இந்த கூடுதல் அரிசி வினியோகம் அடுத்த மாதம் (ஜூலை) சேர்த்து வழங்கப்படும்.

எனவே, மத்திய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து, அரிசி ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜூன் மாதத்தில் மொத்தமாக வினியோகிக்கப்படும் அரிசி விவரங்கள் ரேஷன் கடைகளில் உள்ள விளம்பரப்பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியம்: நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; மந்திரி அறிவிப்பு
மராட்டியத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மந்திரி அறிவித்து உள்ளார்.
2. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. 11-வது முறையாக நீட்டிப்பு: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் தமிழக அரசு உத்தரவு
11-வது முறையாக நீட்டிப்பு: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் தமிழக அரசு உத்தரவு.
4. கேரளா, மராட்டியம் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு
2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழுடன் வந்தால் கேரளா, மராட்டியத்துக்கு விமானத்தில் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை என சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
5. சித்தனங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தரப்படுமா? கிராமமக்கள் எதிர்பார்ப்பு
சித்தனங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தரப்படுமா? என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.