பிரபல தயாரிப்பாளர் மீது காவல் துணை ஆணையரிடம் நடிகர் விஷால் புகார்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Jun 2021 11:41 AM GMT (Updated: 2021-06-09T17:11:01+05:30)

பிரபல தயாரிப்பாளர் மீது காவல் துணை ஆணையரிடம் நடிகர் விஷால் புகார் அளி்த்துள்ளார்.

சென்னை, 

தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகராக உள்ள விஷால், தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார் 

தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் தொகையை பெற்றாக கூறப்படுகிறது. பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார். 

Next Story