மாநில செய்திகள்

ஜூன் 09: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் + "||" + June 09: Full district-wise corona impact situation in Tamil Nadu

ஜூன் 09: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

ஜூன் 09: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,92,025 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 20,59,597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 31,253 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 405 பேர்  உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 28,170 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் இன்று மேலும் 2,319 பேருக்கும், ஈரோட்டில் 1,405 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,20,877 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 7,613 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,92,43,359 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,80,750 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,85,19,161 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,70,332 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,04,258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 13,44,157 பேர் ஆண்கள் (இன்று-9,522 பேர்), 9,47,830 பேர் பெண்கள் (இன்று-7,799 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-தொடர்புடைய செய்திகள்

1. 34 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- பல்லாயிரக்கணக்கானோர் ஏமாற்றம்
மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் இனி தடுப்பூசி போட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
2. ஜூன் 08: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
3. தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு 5 மணிநேரத்திற்கு பிறகு இ-பதிவு இணையதளம் செயல்படத் தொடங்கியது
தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
4. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது
தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று அமலானது.
5. தமிழ்நாட்டில் 32,646 கொரோனா சிகிச்சை படுக்கைகள் காலியாக உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 32ஆயிரத்து 646 படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.