வனப்பகுதியின் ஒரு அங்குலம் நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


வனப்பகுதியின் ஒரு அங்குலம் நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Jun 2021 7:03 PM GMT (Updated: 9 Jun 2021 7:03 PM GMT)

தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி ரிசார்ட் கட்டப்படுகிறது. இம்மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், மரங்கள் வெட்டப்பட்டு, இயற்கை எழில் பாதிக்கப்பட்டுள்ளது. பறவைகள் மாயமாகி வருகின்றன. நீரோடைகள் தடுக்கப்படுவதால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன என்று கூறியிருந்தார்.

நடவடிக்கை எடுக்கவில்லை

தமிழ்நாடு மலைப்பகுதி கட்டிடங்கள் சட்டவிதிகளை மீறி ரிசார்ட் கட்டப்படுகிறது. இதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. வனப்பாதை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் ஆகியோருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எல்லையை வரையறுக்க வேண்டும்

எனவே, வனப்பகுதியை ஆக்கிரமித்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க உத்தரவிட வேண்டும்.

வனப்பகுதியில் கட்டுமான பொருட்கள் வைக்க தடை விதிக்க வேண்டும். அங்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்பை அனுமதிக்கக்கூடாது

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது. நீலகிரி மாவட்ட கலெக்டர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வனப்பகுதியில் இருந்து தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Next Story