மாநில செய்திகள்

‘சீக்கிரமே நல்லது நடக்கும்’ முன்னாள் அமைச்சருடன், சசிகலா பேசும் ஆடியோவால் பரபரப்பு + "||" + ‘Good will happen soon’ with former minister, stirred by audio of Sasikala speaking

‘சீக்கிரமே நல்லது நடக்கும்’ முன்னாள் அமைச்சருடன், சசிகலா பேசும் ஆடியோவால் பரபரப்பு

‘சீக்கிரமே நல்லது நடக்கும்’ முன்னாள் அமைச்சருடன், சசிகலா பேசும் ஆடியோவால் பரபரப்பு
முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், சசிகலா பேசிய ஆடியோ ெவளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,

தொண்டர்களுடன், சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், சசிகலா பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-


சசிகலா:- ஹலோ... ஆனந்தன்.... நல்லா இருக்கீங்களா...

ஆனந்தன்:- நல்லா இருக்கேன்மா... நான் உளுந்தூர்பேட்டை ஆனந்தன்மா...

சசிகலா:- என்ன இப்படி சொல்றீங்க... உங்களை நல்லா ஞாபகம் இருக்கு.

ஆனந்தன்:- தாயில்லா பிள்ளையாக தவிச்சுகிட்டு இருக்கோம்மா...

சசிகலா:- ஒண்ணும் கவலைப்படாதீங்க.. சீக்கிரமே நல்லது நடக்கும்.

தொண்டர்களின் மனக்குமுறல்

ஆனந்தன்:- அரசியலில் இருந்து விலகி போறேனு நீங்க சொன்னதுல இருந்து, நானும் அரசியலுக்கு முழுக்குபோட்டுவிட்டேன். அம்மாவுக்காகவும், இந்த கட்சிக்காகவும் நீங்க பட்ட கஷ்டங்களை எங்களால் மறக்கவே முடியாது?

சசிகலா:- சரி.... சரி... பழைய ஆட்கள் எல்லோருக்குமே தெரியுமே...

ஆனந்தன்:- உங்களை கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் என மனசாட்சி இல்லாம பேசுறாங்களேம்மா... இந்த கட்சியை நீங்க காப்பாத்த வேண்டிய, தொண்டர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்மா?

சசிகலா:- நிச்சயமா... அதான் நான் எல்லோர்கிட்டேயும் பேச ஆரம்பிச்சுட்டேன். நிறைய லெட்டர் வருது. தொண்டர்கள் மிகவும் மன குமுறலுடன் எழுதுறாங்க... அதெல்லாம் பார்த்துட்டுதான் என் மனசு ரொம்ப வருத்தமாயிடுச்சு. அதுக்குப்பிறகு தான் இப்போ பேச ஆரம்பிச்சுருக்கேன். கட்சி நம் கண் எதிரேயே இப்படி ஆகும்போது மிகவும் வருத்தமா இருக்கு. கட்சி இப்படியெல்லாம் போகுதே அப்படிங்குறப்போ, நான் நிச்சயம் தொண்டர்களுக்காக வருவேன்.

நல்லா கொண்டு வந்துடலாம்

ஆனந்தன்:- அம்மாவுக்கு பிறகு நீங்கதான் எங்களுக்கு அம்மா. நீங்க வந்துதான் இந்த கட்சியை பழையபடி வளர்க்கனும்.

சசிகலா:- நிச்சயமா.... நிச்சயமா... நல்லா கொண்டு வந்துடலாம். தலைவர் காலத்துக்கு அப்புறம் அம்மா எப்படி கட்சியை வச்சிருந்தாங்க... எப்படி கட்சியை வளர்த்து கொண்டு வந்தாங்க... அதேவேலையை நாம் செய்வோம்.

ஆனந்தன்:- கட்சியை காப்பாத்த உங்களால்தான் முடியும்... எங்களை உங்க விசுவாசிகளாக ஏத்துக்கோங்க...

சசிகலா:- நிச்சயமா.... வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?

ஆனந்தன்:- எல்லோரும் நல்லா இருக்காங்க.

விரைவில் சந்திப்போம்

சசிகலா:- கொரோனா பாதிப்பு குறையட்டும். உங்களையெல்லாம் நேரில் சந்திக்கிறேன்.

ஆனந்தன்:- கட்சியில் எனக்கு ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர் பதவிகளையெல்லாம் நீங்க வாங்கி கொடுத்தீங்க... அமைச்சராவும் ஆக்குனீங்க... காலத்துக்கும் உங்களுக்கு நன்றியோட இருப்பேன்...

இவ்வாறு அந்த உரையாடல் நடக்கிறது.

அதேபோல ேமலும் சில தொண்டர்களிடமும், சசிகலா பேசும் ஆடியோக்கள் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது
‘சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
2. சசிகலாவை நோக்கிதான் இனி அ.தி.மு.க. செல்லும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
சசிகலாவை நோக்கி தான் இனி அ.தி.மு.க. செல்லும்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
3. ‘‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆசியுடன் கட்சியை நல்லபடியாக கொண்டுவருவேன்’’ சசிகலா பேசிய ஆடியோவால் அரசியல் களத்தில் பரபரப்பு
‘‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆசியுடன் கட்சியை நல்லபடியாக கொண்டு வருவேன்’’, என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
4. “தைரியமாக இருங்கள், கட்சியை சரி செய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்” தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோவால் பரபரப்பு
‘தைரியமாக இருங்கள், கட்சியை சரி செய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்’ என தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்
பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்.