மாநில செய்திகள்

மதுரை-தூத்துக்குடி இடையிலான தொழில் வழிச்சாலையை மேம்படுத்த திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் + "||" + Minister Thangam Tennarasu informed about the project to improve the industrial corridor between Madurai and Thoothukudi

மதுரை-தூத்துக்குடி இடையிலான தொழில் வழிச்சாலையை மேம்படுத்த திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை-தூத்துக்குடி இடையிலான தொழில் வழிச்சாலையை மேம்படுத்த திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மதுரை-தூத்துக்குடி இடையிலான தொழில் வழிச்சாலையை மேம்படுத்த திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.
சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி வருமாறு:-

சிமெண்டு விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு சிமெணடு் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


சென்னை-கோவைக்கு இணையாக மதுரை-தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை மேம்படுத்த தொழில் துறை திட்டமிட்டுள்ளது. மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டு வர தொழில் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவனங்களை உள்ளடக்கிய மன்றம் அமைத்து தொழில் சாத்தியக்கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டமிடப்படும்.

சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் தொடங்க அளிக்கப்படும் அதே சலுகைகள், தென் பகுதிகளில் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. கடந்த 2 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜூலை 15-ந் தேதிக்கு பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய அழைப்பு விடுக்கப்படும். தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி கொற்கை, சிவகளை, ஆதிச்ச நல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. யாஸ் புயல்: ஒடிசாவில் 75 லட்சம் பேர் பாதிப்பு; அரசு அதிகாரி தகவல்
ஒடிசாவில் யாஸ் புயலால் 10,644 கிராமங்களை சேர்ந்த 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.
2. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும், படிப்படியாக இந்த மாதத்துக்குள் தடுப்பூசிகள் வரும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
3. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
4. ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆய்வு
ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
5. அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் ஆஸ்பத்திரிகள் உரிமம் ரத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை
டாக்டர்கள், நர்சுகளை தாக்கினால் கடும் நடவடிக்கை அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் ஆஸ்பத்திரிகள் உரிமம் ரத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை.