இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு தாரைவார்ப்பு: மத்திய அரசு இனியாவது விழிப்படைய வேண்டும்


இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு தாரைவார்ப்பு: மத்திய அரசு இனியாவது விழிப்படைய வேண்டும்
x
தினத்தந்தி 9 Jun 2021 9:10 PM GMT (Updated: 9 Jun 2021 9:10 PM GMT)

இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு தாரைவார்ப்பு: மத்திய அரசு இனியாவது விழிப்படைய வேண்டும் சீமான் அறிக்கை.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் தலைநகர் கொழும்புவுக்கு அருகே அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதனைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கும் இலங்கை அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம் அமைப்பதற்கு வாங்கிய கடன்களை அடைக்க முடியாததால், இப்பகுதியை சீனாவுக்கு மொத்தமாய்த் தாரைவார்த்து, அந்நாட்டின் இறையாண்மைக்குட்பட்டப் பகுதியாகவும் அறிவித்துச் சட்டமியற்றியிருக்கிறது. இது இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்புக்குப் பெருங்கேட்டை விளைவிக்கக்கூடியப் பேராபத்தாகும்.

ஆகவே, மத்திய அரசு இனியாவது விழிப்புற்று சீனாவின் ஆதிக்கத்தைக் கண்டிக்கவும், தடுக்கவும் முற்பட வேண்டும். நட்பு நாடென இலங்கையுடன் உறவுகொண்டாடுவதை கைவிட்டு, அந்நாட்டுடனான அத்தனை உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story