மாநில செய்திகள்

பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை: பள்ளி அளவில் நடக்க இருந்த நுழைவுத்தேர்வு ரத்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு + "||" + Plus-1 Class Admission: Order of the Commissioner of School Education to cancel the entrance examination which was to be held at the school level

பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை: பள்ளி அளவில் நடக்க இருந்த நுழைவுத்தேர்வு ரத்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை: பள்ளி அளவில் நடக்க இருந்த நுழைவுத்தேர்வு ரத்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது, அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் நடத்தப்பட இருந்த தேர்வை நடத்த தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அதேபோல், மாணவர்கள் நலன் கருதி 9-ம் வகுப்பு இறுதித்தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், பிளஸ்-1 வகுப்பில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேருவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அவசியம். அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், அந்த மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது எப்படி என்பது பற்றி அரசு ஆலோசித்துவருகிறது. இதற்கிடையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

பள்ளி அளவில் தேர்வு

அதில், ‘மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பாடப்பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் (10-ம் வகுப்பு) இருந்து 50 வினாக்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி, அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பள்ளி அளவில் இதுபோன்று தேர்வு நடத்துவதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, நேற்று அந்த சுற்றறிக்கையில் இந்த வழிகாட்டு நெறிமுறையை மட்டும் மாற்றி, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடத்த தேவையில்லை

அதன்படி, ‘மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பாடப்பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். ஏற்கனவே குறிப்பிட்டவாறு 10-ம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்த தேவையில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழு அமைப்பு தமிழக அரசு உத்தரவு
கொரோனா தொற்றினால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2. தமிழகம் முழுவதும் சப்-கலெக்டர்கள் பலர் இடமாற்றம்: சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்கள் நியமனம் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
தமிழகம் முழுவதும் சப்-கலெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்களை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
3. வனப்பகுதியின் ஒரு அங்குலம் நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அரசு முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. கொரோனா தடுப்பிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு விலை நிர்ணயம் தமிழக அரசு உத்தரவு
கொரோனா தடுப்பிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.