மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 16,813 பேருக்கு தொற்று உறுதி + "||" + Further low corona incidence in Tamil Nadu: 16,813 new cases confirmed

தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 16,813 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 16,813 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் 20-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23,08,838 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 358 பேர் (அரசு மருத்துவமனை - 223 பேர், தனியார் மருத்துவமனை - 135 பேர்) உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 28,528 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 20,91,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 32,049 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,236 பேரும், ஈரோட்டில் 1,390 பேரும், சென்னையில் 1,223 பேரும், திருப்பூரில் 897 பேரும், சேலத்தில் 945 பேரும், குறைந்தபட்சமாக சிவகங்கையில் 102 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 1,88,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
2. ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 11,699 பேருக்கு தொற்று உறுதி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 51.67 லட்சத்தைக் கடந்துள்ளது.
3. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.
5. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.