மாநில செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை டி.ஆர்.பாலு எம்.பி. தகவல் + "||" + DR Palu to resume talks with Union ministers on vaccine shortage Information

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்
தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு ரூ.30 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்துக்கு 87 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு 30 நோயாளிகளுக்கு வழங்க முடியும்.


இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி. திறந்து வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கூறியதாவது:-

மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய மந்திரிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். தடுப்பூசி இறக்குமதிக்கோ, உற்பத்திக்கோ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செங்கல்பட்டு அல்லது குன்னூரில் உள்ள 113 ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தடுப்பூசி தொழிற்சாலைகளில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதித்தால் மாநில அரசு உற்பத்தியை தொடங்கும். ஆனால் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அவசர செய்தி
தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை அனுப்புமாறு மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவசர செய்தி அனுப்பி உள்ளார்.
2. சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
3. தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கலாமே!
கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கவேண்டும் என்றால், தடுப்பூசி ஒன்றுதான் சரியான ஆயுதம். அதனால்தான் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.
4. “தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை
தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், அதனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. இந்திய தயாரிப்பில் உருவாகும் 2-வது தடுப்பூசி; 30 கோடி டோஸ் வாங்க மத்திய அரசு முன்பதிவு
பற்றாக்குறையை போக்க முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் 2-வது தடுப்பூசியை 30 கோடி டோஸ் அளவுக்கு வாங்க மத்திய அரசு முன்பதிவு செய்துள்ளது.