அரசின் வருவாயை பெருக்க தனியார் மதுபான பார்களை திறக்க கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


அரசின் வருவாயை பெருக்க தனியார் மதுபான பார்களை திறக்க கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jun 2021 7:12 PM GMT (Updated: 10 Jun 2021 7:12 PM GMT)

அரசின் வருவாயை பெருக்க தனியார் மதுபான பார்களை திறக்க கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் தனியார் பார்கள் அதிக எண்ணிக்கையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்பட முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 5,198 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் 2050 மதுக்கடைகளுடன் பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக 2050 பார்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் கூட, அனைத்து மதுக்கடைகளிலும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பார்கள் செயல்பட்டு வருகின்றன.

தனியார் பார்களை திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது உண்மை என்றால் அது மிகவும் ஆபத்தானதாகும். இதை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி ஏற்கனவே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story