தண்டனை விதிப்பதற்கு முன்பு சிறையில் இருந்த காலத்தையும் கைதிகள், பரோலில் செல்வதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்


தண்டனை விதிப்பதற்கு முன்பு சிறையில் இருந்த காலத்தையும் கைதிகள், பரோலில் செல்வதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 10 Jun 2021 7:48 PM GMT (Updated: 10 Jun 2021 7:48 PM GMT)

தண்டனை விதிப்பதற்கு முன்பு சிறையில் இருந்த காலத்தையும் கைதிகள், பரோலில் செல்வதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை புழல் சிறையில் தண்டனை கைதியாக இருந்து வரும் முகமது அலி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான், 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறேன். சிறை விதிகள்படி தொடர்ந்து 3 ஆண்டுகள் தண்டனை காலத்தை சிறையில் கழித்த பின்பு தான் ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவர். கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் இருந்து வரும் காலத்தை கணக்கிட்டால் நான் 3 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டேன். எனவே, பரோலில் செல்ல எனக்கு தகுதி உள்ளது. தண்டனை அளிக்கப்பட்டதில் இருந்து சிறையில் இருந்து காலத்தை கணக்கிட்டு என்னை பரோலில் செல்ல புழல் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் மறுத்து விட்டார். எனவே, இதை ரத்து செய்து விட்டு என்னை பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர், ‘தண்டனை கைதிகள் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த காலத்தையும் பரோலில் செல்வதற்கு கணக்கில் எடுத்துக்கொண்டு பரிசீலிக்க வேண்டும். பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, மனுதாரருக்கு பரோல் வழங்க மறுத்த புழல் சிறை கண்காணிப்பாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை மாநில அரசு 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

Next Story