மாநில செய்திகள்

செமஸ்டர் தேர்வு 21-ந் தேதி தொடங்கும் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு + "||" + Chennai University announces start of semester examination on 21st

செமஸ்டர் தேர்வு 21-ந் தேதி தொடங்கும் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

செமஸ்டர் தேர்வு 21-ந் தேதி தொடங்கும் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
செமஸ்டர் தேர்வு 21-ந் தேதி தொடங்கும் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.
சென்னை,

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு தான் இருக்கின்றன. கல்லூரிகளில் வகுப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நடப்பு செமஸ்டருக்கான தேர்வும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட இருக்கிறது. அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் நடப்பு செமஸ்டருக்கான தேர்வு தேதியை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


அனைத்து இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி பட்டப்படிப்புகளுக்கு ஏப்ரல்-2021 மாத செமஸ்டர் தேர்வு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வு தொடர்பான விரிவான அட்டவணை மற்றும் ஹால்டிக்கெட் குறித்த விவரங்கள் வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் www.unom.ac.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்படும். இந்த தேர்வு ஆன்லைன் வாயிலாக 3 மணி நேரம் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய நீதிபதி தலைமையில் 9 பேர் குழு அமைப்பு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2. 14-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னையில் வருகிற 14-ந்தேதி நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.
3. சென்னை, மதுரை ஐகோர்ட்டு 14-ந் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் தலைமை பதிவாளர் அறிவிப்பு
சென்னை, மதுரை ஐகோர்ட்டு 14-ந் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் தலைமை பதிவாளர் அறிவிப்பு.
4. ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு
ரேஷன்கார்டுதாரர்களுக்கு மத்திய அரசின் கூடுதல் ஒதுக்கீட்டுடன் ஜூன், ஜூலை மாதங்களில் அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
5. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.