மாநில செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது + "||" + Youth arrested for kidnapping son of acquaintance via Instagram

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழியின் மகனை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர்.
கோவை,

கோவையை அடுத்த வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 28), தச்சு தொழிலாளி. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நட்பாக பழகி வந்தனர்.


இந்த நிலையில் அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு அவசர தேவையாக ரூ.1½ லட்சம் தேவைப்படுகிறது என்று சரவணகுமாரிடம் கூறினார். அந்த பணத்தை கொடுத்தால் விரைவில் திரும்ப கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தார்.

ரூ.1½ லட்சம் கொடுத்தார்

இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் தோழிக்கு ரூ.1½ லட்சத்தை கொடுத்தார். பின்னர் அதை பலமுறை கேட்டும் அந்த பெண் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் தர்மபுரி செல்ல சரவணகுமார் முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் தர்மபுரிக்கு சென்றார். ஏற்கனவே அந்த பெண்ணின் முகவரி அவருக்கு தெரியும் என்பதால், நேராக தனது தோழியின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த தனது தோழியை சந்தித்து தான் கொடுத்த கடனை திரும்ப கொடுக்கும்படி கூறினார்.

தோழியின் மகன் கடத்தல்

அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை. பணம் கிடைக்கும் போது கொடுப்பதாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், தனது தோழியின் 7 வயது மகனை அங்கிருந்து கடத்தி வந்தார்.

இதுகுறித்து அவர் தர்மபுரி போலீசில் புகார் செய்தார். இதுபற்றி தர்மபுரி போலீசார் வடவள்ளி போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் இரவில் சரவணகுமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர் கடத்தி வைத்திருந்த 7 வயது சிறுவனையும் மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 2 பேர் கைது
அசாமில் சர்வதேச அளவில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 250 கிராம் கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
2. பெரியபாளையம் போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது
பெரியபாளையம் போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசி, சாபமிட்ட ஆட்டோ டிரைவர் கைது
ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் அடைந்த டிரைவர், பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசியதுடன், அவருக்கு சாபமிட்டார். அவர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
4. டி.வி. பார்க்க கூடாது, செல்போன் பயன்படுத்த கூடாது என கொடுமை: மகள், மகன் சாவுக்கு காரணமான சைக்கோ தந்தை கைது
டி.வி. பார்க்க கூடாது, செல்போன் பயன்படுத்த கூடாது என்று கணவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் வேதனையடைந்த அவரது மனைவி 3 பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்து விட்டு தானும் குடித்தார். இதில், மகள், மகன் உயிரிழந்தனர். அவர்களது சாவுக்கு காரணமான சைக்கோ தந்தை நேற்று கைது செய்யப்பட்டார்.
5. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.