ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தில் மணல் குவாரி நடத்தியது எப்படி? கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தில் மணல் குவாரி நடத்தியது எப்படி? கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 10 Jun 2021 10:53 PM GMT (Updated: 10 Jun 2021 10:53 PM GMT)

ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தில் மணல் குவாரி நடத்தியது எப்படி? இதற்கு துணை போன அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தூத்துக்குடி கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

மதுரை,

நில உச்சவரம்பு சட்டம் மற்றும் சீர்திருத்த சட்டங்களின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் நிலமற்ற ஏழைகளுக்கு கடந்த 2012-ம் ஆண்டு நிலம் வழங்கப்பட்டது. இதில் கடந்த 2018-ம் ஆண்டு 6 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவருக்கு சட்டவிரோதமாக ஆர்.டி.ஓ. மற்றும் 2 தாசில்தார்கள் போலி ஆவணங்கள் தயாரித்து பட்டா வழங்கியுள்ளனர். அந்த இடத்தில் மணல் குவாரிகள் தொடங்க மாவட்ட கலெக்டரிடம் அனுமதியும் பெற்று கொடுத்துள்ளனர்.

அதன்படி அங்கு மணல் குவாரி செயல்பட்டு வந்துள்ளது. இந்த மோசடியை கண்டுபிடித்த கனிமவள அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். ஆனாலும் அவரது பரிந்துரை நிலுவையில் உள்ளது.

அதிகாரிகளிடம் மனு

இதற்கிடையே தங்களின் இடத்தில் விவசாயம் மற்றும் வீடு கட்டுவதற்கு உரிய நபர்கள் சென்றபோது மணல் குவாரி நடத்தியவர்கள் அவர்களை தடுத்து விரட்டிவிட்டனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மக்கள் தூத்துக்குடி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த புகார் மனுக்களின் அடிப்படையில் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் அதிரடி கேள்வி

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஏழைகளுக்கு வழங்கிய இடத்தில் மணல் குவாரி நடத்தியது எப்படி? எதன் அடிப்படையில் அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது? இதற்கு துணை போன அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் என்ன நடவடிக்கை எடுத்தார்?” என்று அதிரடி கேள்விகளை எழுப்பினர்.

கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு

விசாரணை முடிவில், “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும். இந்த மோசடி சம்பவம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் 3 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை ஜூலை மாதம் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story