14-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


14-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 11:38 PM GMT (Updated: 10 Jun 2021 11:38 PM GMT)

சென்னையில் வருகிற 14-ந்தேதி நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

இதுகுறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 14-ந்தேதி பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும், பிற தற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் எம்.எல்.ஏ. அடையாள அட்டையுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

நிர்வாகிகள் வரக்கூடாது

14-ந்தேதி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மட்டுமே நடைபெற உள்ளதால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அன்றைய தினம் கட்சி நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் கட்சி அலுவலகத்துக்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கட்சி அலுவலக வளாகத்துக்குள் எம்.எல்.ஏ.க்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story