கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கு விற்பனை


கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 Jun 2021 5:08 AM GMT (Updated: 11 Jun 2021 5:08 AM GMT)

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதன் விலையில் நாள் தோறும் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.97.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து ரூ.91.42-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலை அதன் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவையும் சேர்த்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

இதன்படி கடலூரில் கடலூர் மாவட்டம் குமராட்சியில் பெட்ரோல், டீசலை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், அங்கு பெட்ரோல் விலை 99 ரூபாயை கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.65-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Next Story