கவர்னரிடம் எழுவர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை


கவர்னரிடம் எழுவர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 8:30 AM GMT (Updated: 11 Jun 2021 8:30 AM GMT)

எழுவர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் கவர்னரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் கைதாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற பரிந்துரை தீர்மானத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி, அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது.

இருப்பினும் இதுவரை எழுவர் விடுதலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இது குறித்து கவர்னரிடம் வலியுறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையின் மீது விரைந்து விடிவெடுக்க முதல்-அனைச்சர் ஸ்டாலின், கவர்னரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதிடுவதற்கு மனித உரிமைகளில் அக்கறை கொண்ட திறமையான மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள டாக்டர் ராமதாஸ், மிக விரைவில் இருள் விலகி ஒளி பிறக்கட்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story