மீண்டும் திறந்தால் பேராபத்து 'டாஸ்மாக்' மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல்


மீண்டும் திறந்தால் பேராபத்து டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2021 7:45 PM GMT (Updated: 11 Jun 2021 7:45 PM GMT)

மீண்டும் திறந்தால் பேராபத்து 'டாஸ்மாக்' மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின்போது மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தி.மு.க. போராடிவிட்டு இப்போது மதுக்கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்?

கடந்த ஆண்டு மே 7-ந்தேதி அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் பதாகை ஏந்தி போராடியது ஞாபகத்தில் இல்லையா?

தற்போது கொரோனா நோய் தொற்றின் அபாயம் குறைந்து வருகிறது என்பதால் பல மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தயாராகி வருவது தமிழகத்திற்கு பேராபத்தில் முடியும்.

மதுக்கடைகள் திறப்பதற்கு அனைத்து தாய்க்குலங்களும் எதிர்ப்பு என்ற நிதர்சனமான உண்மையை தமிழக முதல்வர் உணர வேண்டும். தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்து நிரந்தரமாக மூட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story