மாநில செய்திகள்

கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்? + "||" + Some relaxation in addition to the 11 districts where corona infection is low?

கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்?

கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்?
கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்கள் மற்றும் தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது.
சென்னை, 

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் வரும் 14-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். எனினும், நோய்த்தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 14-6-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

* மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர், எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை.

* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனைக் கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

* வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனைக் கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

"நோய்த்தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

* அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

* வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனைக் கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

* ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* தற்போது இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

* தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்குச் சென்று வர அனுமதிக்கப்படுவர்.

* தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவிகிதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

* வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு பெண் பலி
கொரோனாவுக்கு பெண் உயிரிழந்தார்.
2. கொரோனாவுக்கு 2 பேர் பலி
கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
3. புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று
4. 23 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. கொரோனாவுக்கு 2 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.