மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு + "||" + Electric train service increase in Chennai from today: Railway division announcement

சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்படும் என்று ரெயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை, 

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை ரெயில்வே கோட்டமும், மின்சார ரெயில் சேவையை அதிகரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 7-ந் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும்.

அதேபோல், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரெயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் 20-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 98 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது.
2. "சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட உள்ளது" - மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட உள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
3. சென்னையில் எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை
சென்னையில் எழும்பூர், சேப்பாக்கம், தி.நகர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
4. தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. ஜூலை 7: சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.