ஜுன்15: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


ஜுன்15: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 15 Jun 2021 1:23 AM GMT (Updated: 15 Jun 2021 1:23 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. 

 கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.69 ரூபாய், டீசல் லிட்டர் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.

Next Story