தமிழகத்தில் ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Jun 2021 2:26 AM GMT (Updated: 15 Jun 2021 2:26 AM GMT)

தமிழகத்தில் ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ஆரம்பக்கட்டத்தில் மக்கள் மத்தியில் தயக்கம் காணப்பட்ட நிலையில், அரசின் விழிப்புணர்வு நடவடிக்கையை அடுத்து தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது

தமிழகத்தில் நேற்று 2,327 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 68 ஆயிரத்து 734 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 26 ஆயிரத்து 983 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 853 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,114 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 1 லட்சத்து 60 ஆயிரத்து 17 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரத்து 418 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Next Story