மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Jun 2021 5:30 AM GMT (Updated: 15 Jun 2021 5:30 AM GMT)

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பொது முடக்கம் காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. 

தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இருந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
 
அதனைப்போலவே ஏப்ரல் மாதம் மின் கட்டணம் செலுத்தாத உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கான கூடுதல் வைப்புத் தொகையும் செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

Next Story