மாநில செய்திகள்

ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பது என்ன நியாயம்? அன்புமணி ராமதாஸ் + "||" + Corona financial assistance from the Government of Tamil Nadu justification for giving with one hand and plucking with the other? Anbumani Ramadas

ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பது என்ன நியாயம்? அன்புமணி ராமதாஸ்

ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பது என்ன நியாயம்? அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தன்னுடைய ‘டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஒரு நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 4-ல் 3 பங்கு கடைகள் தான் திறந்துள்ளன என்றாலும், வணிகம் மட்டும் கிட்டதட்ட இரு மடங்கு நடந்து இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை 
மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு. கொரோனா நிதி உதவியாக ரூ.4 ஆயிரத்து 200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்க உள்ளது. ஆனால் தினசரி ரூ.165 கோடிக்கு மது விற்றால், ஒரு மாதத்தில் ரூ.5 ஆயிரம் கோடியை மக்களிடம் இருந்து மதுவை கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து, மறுகையால் பறிப்பது என்ன நியாயம்? மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவது தான். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ படிப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு: ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி அன்புமணி ராமதாஸ் கருத்து
அகில இந்திய மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2. தமிழகத்தில் மாவட்ட அளவில் கால்பந்து போட்டிகள் நடத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் மாவட்ட அளவில் கால்பந்து போட்டிகள் நடத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
3. மருந்தாளுநர் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு பணி அளிக்கப்பட வேண்டும் அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மருந்தாளுநர் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு பணி அளிக்கப்பட வேண்டும் அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
4. நாங்கள் மத்திய அரசு என்றுதான் அழைப்போம்; ஒன்றிய அரசு என்று கூறுவதால் எந்த பயனும் இல்லை: அன்புமணி ராமதாஸ்
ஒன்றிய அரசு என்று அழைப்பதில் எந்த பயனும் இல்லை. நாங்கள் மத்திய அரசு என்றுதான் அழைப்போம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
5. தென்பெண்ணை துணைநதியில் அணை: கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தென்பெண்ணை துணைநதியில் அணை கட்டியிருக்கும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.