மாநில செய்திகள்

60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை + "||" + 60 Thousand Covaxin Vaccine Arrived to TamilNadu

60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை

60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை
மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி இன்று தமிழகம் வந்தடைந்தது.
சென்னை,

மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் தமிழகத்தின் நேரடி கொள்முதல் திட்ட்டத்தின் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. குறிப்பாக, கடந்த 10-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை 14 லட்சத்து 92 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில், மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் தமிழகத்திற்கு இன்று மேலும் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன.

சென்னைக்கு வந்துள்ள இந்த தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக பயன்பாட்டின் அடிப்படையின் பிரித்து வழங்கும் பணிகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி தேவை அதிகரிப்பதால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை என்பது நீடித்து வருகிறது. தொடர்ந்து கூடுதல் தடுப்பூசிகளை பெறும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்த உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
2. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 1412 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 1,412 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3. ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
4. 685 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் 685 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5. கொரோனா தடுப்பூசி முகாம்
இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.