தமிழகம் மின் மிகை மாநிலம் அல்ல : அமைச்சர் செந்தில் பாலாஜி


தமிழகம் மின் மிகை மாநிலம் அல்ல : அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 17 Jun 2021 12:03 PM GMT (Updated: 17 Jun 2021 12:03 PM GMT)

கடந்த ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், தற்போது மின் தடை ஏற்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில்  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

 கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், தற்போது மின் தடை ஏற்படுகிறது.தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக 10 லட்சம் புகார்கள் வந்துள்ளது. அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படாது.

மின்சார வாரியத்துக்கு ரூ. 1,33,671 கோடி கடன் உள்ளது; கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்.தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல;நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம்;

கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலம் என்று அழைத்தார்கள்; விவசாயிகளுக்கு மின்சாரம் தரவில்லை. தமிழகம் மின் மிகை மாநிலம் அல்ல. சட்டமன்றத்தில் அனைத்துக்கும் பதில் தரப்படும் என கூறினார்.

Next Story