மாநில செய்திகள்

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம் + "||" + Intensity of Phase 7 excavation work in Keeladi

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகளின் ெதால்லியல் துறை சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு 6-ம் கட்ட அகழ்வாய்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடந்தன. இந்த நிலையில் கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

இதனால் அகழாய்வு பணிகளும் கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 7 ஆம் தேதி மீண்டும் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் பாசி மணிகள், தாயக்கட்டை, காதில் அணியும் தங்க ஆபரணம், முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு, இரும்பாலான கத்தி, ஆணிகள், சுடுமண் முத்திரைகள், எடைக்கற்கள், சுடுமண் சக்கரம், சங்கு வளையள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
2. நிலவு, சூரியன் பொறித்த வெள்ளி நாணயம், சுடுமண் முத்திரைகளை ஆவணப்படுத்தும் பணி
கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நிலவு, சூரியன் பொறித்த வெள்ளி நாணயம், சுடுமண் முத்திரைகளை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது
3. கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு
தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கீழடியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
4. கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி - முன்னோர்கள் பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு
கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது, நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5. கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன
கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன.