மாநில செய்திகள்

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு + "||" + Less than 10 thousand corona infections after long days in Tamil Nadu

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் தற்போது 1,00,523 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 1,75,010 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 210 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 22,720 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,66,793-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,00,523 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2. அந்திராவில் இன்று 2,068 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஆந்திராவில் 21,198 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் 3-வது அலையை தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
தமிழகத்தில் 3-வது அலையை தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
4. கர்நாடகாவில் இன்று 2,052 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கர்நாடகாவில் தற்போது 23,253 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் தற்போது 21,207 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.