மாநில செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது - எடப்பாடி பழனிசாமி + "||" + Tamil Nadu government should not give permission for hydrocarbon projects in Ariyalur district - Edappadi Palanisamy

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது - எடப்பாடி பழனிசாமி

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது - எடப்பாடி பழனிசாமி
அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறும் பொருட்டு பொதுமக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை பொதுமக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை என 16.1.2020 அன்று திருத்தப்பட்ட அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது என 16.1.2020. பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், காவேரி டெல்டா பகுதியினை பாதுகாக்கும் பொருட்டும், பொதுமக்களின் கருத்துக் கேட்புக்குப் பின்னரே இதுபோன்ற திட்டங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசின் திருத்தப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெறவேண்டும் என பாரதப் பிரதமருக்கு அப்போதே கடிதம் எழுதினேன். 

இப்படிப்பட்ட நிலையில் இன்று (17.6.2021), வெளிவந்த ஒரு செய்தியில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிய வருகிறது. 

அம்மாவின் அரசு ஆட்சியில் இருந்தபோது தமிழ் நாட்டில் ஓ.என்.ஜி.சி நிறுவனமோ அல்லது இதுபோன்ற இதர எண்ணெய் நிறுவனங்களோ, ஏதேனும் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கவில்லையோ அதுபோல், முதல்வரும் அரியலூர் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு எதிரான ஓ.என்.ஜி.சின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ் நாடு அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு, அரசின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.