மாநில செய்திகள்

தொடர்ந்து இறங்குமுகம்: தங்கம் விலை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைவு ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது + "||" + Continuing downhill Gold price in 3 days Rs 1,000 less per pound

தொடர்ந்து இறங்குமுகம்: தங்கம் விலை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைவு ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது

தொடர்ந்து இறங்குமுகம்: தங்கம் விலை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைவு ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தங்கம் விலை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைவு 43 நாட்களுக்கு பிறகு, ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
சென்னை, 

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை பெருமளவில் சரிவை தான் சந்தித்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்து இருக்கிறது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 500-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 460-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 வரை குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 43 நாட்களுக்கு பிறகு மீண்டும்ஒரு பவுன் தங்கம் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருக்கிறது.

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் மளமளவென குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 74 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்து 400-க்கும் விற்பனையான வெள்ளி, நேற்று கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் சரிந்து, ஒரு கிராம் 74 ரூபாய் 10 காசுக்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்து 100-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கடந்த 2 நாட்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 300 குறைந்துள்ளது.