மாநில செய்திகள்

ஜூன் 19: சென்னையில் பெட்ரோல் ரூ.98.14, டீசல் ரூ.92.31க்கு விற்பனை + "||" + In Chennai, petrol sells for Rs 98.14 and diesel for Rs 92.31

ஜூன் 19: சென்னையில் பெட்ரோல் ரூ.98.14, டீசல் ரூ.92.31க்கு விற்பனை

ஜூன் 19: சென்னையில் பெட்ரோல் ரூ.98.14, டீசல் ரூ.92.31க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 98.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

5 மாநில சட்டப்பேரவைதேர்தல் முடிவடைந்ததை அடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

இதன்படி, நேற்று பெட்ரோல்விலை 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.98.14, டீசல் விலை 27 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.92.31 என விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.14க்கும் டீசல் ரூ.92.31க்கும் விற்பனையாகுகிறது. இந்தநடைமுறை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.