மேகதாது பிரச்சினை; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்


மேகதாது பிரச்சினை; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 19 Jun 2021 11:58 PM GMT (Updated: 19 Jun 2021 11:58 PM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும். மேகதாது அணை தொடர்பான அனைத்து விவகாரங்களும் சுப்ரீம் கோர்ட்டிலும், மத்திய அரசிடமும் நிலுவையில் உள்ளன என்பதை மட்டும்தான் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கருத்தில் கொண்டதே தவிர, மேகதாது அணையை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டதா? அதனால் சுற்றுசூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொள்ளவில்லை. இந்த விஷயத்தை வலியுறுத்தி வெற்றி பெற தமிழக அரசின் வழக்கறிஞர் தவறி விட்டார். எனவே, பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story