மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் மறுப்பு + "||" + No maintenance work in Tamil Nadu for 9 months; Minister Senthil Balaji Allegation: Former Minister denies

தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் மறுப்பு

தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு:  முன்னாள் அமைச்சர் மறுப்பு
தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுத்துள்ளார்.


சென்னை,

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்பொழுது, கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், தற்போது மின் தடை ஏற்படுகிறது என கூறினார்.

தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.  அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  மின்சார வாரியத்துக்கு ரூ. 1,33,671 கோடி கடன் உள்ளது.  கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல.  நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம்.  கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலம் என்று அழைத்தார்கள்.  விவசாயிகளுக்கு மின்சாரம் தரவில்லை. தமிழகம் மின் மிகை மாநிலம் அல்ல. சட்டமன்றத்தில் அனைத்துக்கும் பதில் தரப்படும் என கூறினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுத்துள்ளார்.  பராமரிப்பு இல்லாதிருந்தால் கடந்த மே 2ந்தேதி வரை எப்படி மின்சாரம் வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சரண்ஜித் நியமனம் அரசியல் தந்திரம்; மாயாவதி குற்றச்சாட்டு
பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடைபெற ஒரு சில மாதங்களே உள்ள சூழலில் சரண்ஜித் நியமனம் அரசியல் தந்திரம் போல் தோன்றுகிறது என மாயாவதி கூறியுள்ளார்.
2. கொரோனா 2வது அலை உயிரிழப்பு 4 லட்சம் அல்ல 43 லட்சம்; மத்திய அரசு மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு
கொரோனா 2வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து காட்டியுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
3. போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகள் இல்லை; அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டு
விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
4. பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும்காஷ்மீரின் பன்முக கலாசாரத்தை உடைக்க முயற்சிக்கின்றன ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் காஷ்மீரின் பன்முக கலாசாரத்தை உடைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
5. ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு
ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என தெலுங்குதேச பொது செயலாளர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.