மாநில செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள் + "||" + Bullets stuck in Chennai Corporation officer's bag at Madurai airport

மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்

மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்
மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்.
மதுரை,

சென்னை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சக்தி மணிகண்டன் (வயது 56). சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருந்த தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் சக்தி மணிகண்டனின் பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 4 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.


இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சக்தி மணிகண்டனை பெருங்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சக்தி மணிகண்டன் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்கிறார். வீட்டில் பெட்டியில் இருந்த தோட்டாக்களை தவறுதலாக கொண்டு வந்துவிட்டதாக அவர் போலீசில் தெரிவித்தார். ஆனாலும் பெருங்குடி போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கிய பூர்ணா
நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற நடிகை பூர்ணா, போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
2. ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அமெரிக்க தடகள சாம்பியன்: 5 ஆண்டுகள் விளையாட தடை
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அமெரிக்காவின் 100 மீட்டர் தடகள சாம்பியன் பிரையன்னா மெக்நீல் 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.