மாநில செய்திகள்

வேலூர் லாரி மீது பைக் மோதல்: ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழப்பு + "||" + Bike collision on Vellore: 4 of the same family killed

வேலூர் லாரி மீது பைக் மோதல்: ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழப்பு

வேலூர் லாரி மீது பைக் மோதல்:  ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழப்பு
வேலூரில் லாரி மீது பைக் மோதிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
வேலூர்

வேலூர் மாவட்டம் பாஸ்மார்பணடா பகுதியை சேர்ந்தவர் ராஜா.  கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார்.  இவரது மனைவி காமாட்சி.  இந்த தம்பதியின் மகன்கள் சரண் (வயது 6), விண்ணரசன்(வயது 4).

இவர்கள் நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களது பைக் மீது எதிரே பெங்களூரில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த ராஜா, அவரது மனைவி காமாட்சி, மகன் விண்ணரசு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சரண் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுனர் முருகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்; 2 பேர் மாயம்
அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் காயம் அடைந்து உள்ளார்.
2. தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை: அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேர் கைது
தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை சம்பவத்தில் அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
3. அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒரு பெண் பலி; 9 பேர் காயம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.
4. மளிகை கடைக்காரரை சுஷில் குமார் அடித்து, உதைத்த வழக்கு: டெல்லி போலீசார் விசாரணை
மல்யுத்த வீரர் சுஷில் குமார் மளிகை கடைக்காரருக்கு காசு கொடுக்காமல் அடித்து, உதைத்த மற்றொரு வழக்கை டெல்லி போலீசார் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.