மாநில செய்திகள்

பாலியல் புகாரில் கைது: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி மனு தாக்கல் + "||" + Former AIADMK minister Manikandan has filed a petition in the Chennai Magistrate's Court seeking bail

பாலியல் புகாரில் கைது: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி மனு தாக்கல்

பாலியல் புகாரில் கைது: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி மனு தாக்கல்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சென்னை அடையாறு போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டார். அதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து,  மணிகண்டனை ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்நிலையில் நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் புகார்: ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு!
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2. பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவு
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
4. பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. பாலியல் புகாரில் மூன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த சாமியார் கைது
பாலியல் புகாரில் மூன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த சாமியார் பாபா சச்சிதானந்தா கைது செய்யப்பட்டு உள்ளார்.