பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் - மு.க.ஸ்டாலின் உறுதி


பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் - மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 22 Jun 2021 7:43 AM GMT (Updated: 2021-06-22T13:28:24+05:30)

நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்

சென்னை

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் அதனை எதிர்த்து வருகிறோம். கவர்னர்  உரை மீதான விவாதம் நடைபெற்று வருவதால் தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழ்வதும் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்ற முடிவுச் எய்யப்ட்டு உள்ளது.  குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானமும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என கூறினார்.

Next Story