மாநில செய்திகள்

சென்னை உள்பட தமிழகத்தில் 19 இடங்களில் கைவரிசை வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.48 லட்சம் கொள்ளை + "||" + Rs 48 lakh robbery at handloom bank ATMs in 19 places in Tamil Nadu including Chennai

சென்னை உள்பட தமிழகத்தில் 19 இடங்களில் கைவரிசை வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.48 லட்சம் கொள்ளை

சென்னை உள்பட தமிழகத்தில் 19 இடங்களில் கைவரிசை வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.48 லட்சம் கொள்ளை
சென்னை உள்பட தமிழகத்தில் 19 இடங்களில் வங்கி ஏ.டி.எம்.களில் நூதனமுறையில் ரூ.48 லட்சத்தை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை,

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த நூதன கொள்ளை பற்றிய விவரம் வருமாறு:-

நூதன கொள்ளை

வங்கி ஏ.டி.எம். மையங்களில் தற்போது பணம் செலுத்தும் வசதி கொண்ட எந்திரங்களும் வைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஏ.டி.எம். எந்திரங்களில் மட்டும் நூதன கொள்ளை நடந்து இருக்கிறது. குறிப்பாக ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களை குறிவைத்து இந்த கொள்ளை அரங்கேறி உள்ளது.


சென்னையில் மட்டும் 7 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

ஆலோசனை

இந்த கொள்ளை சம்பவத்தை தடுப்பது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுடன், பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

19 புகார்கள்

கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளன.

இதனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதனால் இழப்பீடு ஏற்படவில்லை. சென்னையில் கடந்த 17-ந்தேதி, 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் 7 புகார்கள் வந்துள்ளன.

கொள்ளை நடந்தது எப்படி?

சாதாரண வங்கி அட்டையை பயன்படுத்தி பணம் போடும் எந்திரத்தில் பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பணத்தை எடுத்த தகவல் வங்கிக்கு தெரியாதபடி நூதன முறையை கையாண்டு இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். நூதன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த திருட்டு நடந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தவுடன் தங்களது ஏ.டி.எம். மையங்களில் உள்ள அனைத்து எந்திரங்களிலும் பணம் செலுத்தும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி விட்டனர். பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எந்திரத்தில் உள்ள சிறிய தவறை தெரிந்து கொண்டு இந்த திருட்டை நடத்தி உள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் எங்களிடம் கொடுத்துள்ளது. அது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

வடமாநில கும்பல்

தமிழகத்தில் முதல் முறையாக இது போன்ற நூதன திருட்டு நடந்துள்ளது. வடமாநில கும்பல் இதில் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். 4 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா? என்று கேட்டுள்ளோம்.

மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அதற்கும், இங்கு நடந்த சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறோம்.

தனிப்படை

தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன்

பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஏ.டி.எம். மையங்களில் பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக மட்டுமே இந்த நூதன திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியை பொருத்தவரை குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான பணம் போடும் எந்திரங்களை மட்டும் பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒரு நிறுவனத்தின் எந்திரங்களில் மட்டும் இந்த நூதன திருட்டு நடந்துள்ளது. அந்த நிறுவனத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தனிப்படை விரைந்தது

இந்த நூதன திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய பிரியாணி கடை ஊழியர் நண்பர்கள் 5 பேருடன் கைதானார்
வியாசர்பாடியில் மர்மநபர்கள் தன்னை கத்திமுனையில் மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய பிரியாணி கடை ஊழியர், தனது நண்பர்கள் 5 பேருடன் கைதானார்.
2. புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3. பரிசாக வந்த 1 லட்சம் புத்தகங்களை பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்கிய மு.க.ஸ்டாலின்
பரிசாக வந்த 1 லட்சம் புத்தகங்களை பள்ளி, கல்லூரிகளுக்கும், பக்ரைன் நாட்டு தமிழர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
4. சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி
சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி.
5. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.14¾ லட்சம் மோசடி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் 4 பேர் மீது வழக்கு
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.