மாநில செய்திகள்

தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + "||" + Chance of rain in 5 districts including Theni, Dindigul and Madurai today - Meteorological Center

தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தாலும், வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் (புதன்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

அதேபோல், நாளை (வியாழக்கிழமை) முதல் 26-ந் தேதி (சனிக்கிழமை) வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘செய்யூர், வளவனூர் தலா 7 செ.மீ., திருக்கோவிலூர், வீரபாண்டி, பரங்கிப்பேட்டை தலா 4 செ.மீ., மணல்மேடு, ஏரையூர் தலா 3 செ.மீ., செந்துறை, அவலாஞ்சி, திருத்துறைப்பூண்டி, வடபுதுபட்டு தலா 2 செ.மீ.' உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும் - பழனிவேல் தியாகராஜன்
சிஎம்டிஏ போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும் என அமைச்சர் பழனிவேல் ராஜன் கூறினார்.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரைக்கு எதிராக சேலம் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மதுரை அணிக்கு எதிரான இன்றைய டி.என்.பி.எல். லீக் ஆட்டத்தில் சேலம் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டி.என்.பி.எல். லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 125-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124-ரன்கள் எடுத்துள்ளது.